• Jan 18 2025

அடுத்த ஆளுக்கு பாயசம் ரெடி... மாஸ்டர் பிளான் போட்டு வலை விரிக்கும் மாயா... இப்படி எல்லாமா யோசிப்பாங்க...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 7 தற்போது ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்களின் கேம் ப்ளான் எதிர்பார்க்காத வகையில் இருக்கிறது. இதுவே விஜய் டிவியின் டிஆர்பிக்கும் ஒரு விதத்தில் பக்க பலமாக இருந்து வருகிறது.


எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை சண்டைகள் வித்தியாச கோணங்களில் நடந்து வருகிறது. அதிலும் முக்கியமாக மாயா சில அல்லக்கைகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு செய்யும் வில்லத்தனம் ஆணவத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்ல வேண்டும். 


பிரதீப் வெளியேறியமைக்கும்  இவரும் ஒரு முழு காரணம் இருக்கிறது. இதற்கு பின்னணியில் இருக்கும் ஒரே காரணம் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் மட்டுமே. அதனாலேயே பிளான் பண்ணி மாயா வெளியேற்றி விட்டார். அதற்கு அடுத்ததாக இப்போது ரசிகர்களின் ஆதரவு விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு இருக்கிறது.


வார இறுதியில் வரும் கைத்தட்டலை வைத்து மாயா மற்றும் பூர்ணிமா தெரிந்து கொண்டார்கள். அதனாலேயே நேற்றைய எபிசோடில் பூர்ணிமா அர்ச்சனாவுக்கு லட்டு கொடுத்து பிரண்ட்ஷிப் தூது விட்டார். ஆனால் உண்மையில் அர்ச்சனாவை வைத்து விசித்ராவை காலி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் பிளான்.


அதனாலேயே இப்போது விசித்ராவுக்கு பாயாசத்தை போட இவர்கள் தயாராகி விட்டனர். அதற்கு அர்ச்சனாவை துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைக்கின்றனர். இதில் அர்ச்சனா வீழ்வாரா, விசித்ரா சுதாரிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

Advertisement

Advertisement