• Mar 26 2026

மூன்று மொழி ரசிகர்களையும் வசூலால் அலற வைத்த லோகா...! எவ்வளவு தெரியுமா?

Roshika / 6 months ago

Advertisement

Listen News!

நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘லோகா’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல நடனம் கலைஞர் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.


தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளாவியமாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்யாணி பிரியதர்ஷனின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பலரால் பாராட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரைப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், ‘லோகா’ திரைப்படம் உலகளவில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு மலையாள நடிகர் நடிப்பில் உருவான பன்மொழித் திரைப்படத்திற்கு கிடைத்த பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.


இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான். அவரது தயாரிப்பில் வந்த இந்த திரைப்படம், மலையாள சினிமாவின் மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளது. ரசிகர்கள் துல்கரை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர். ‘லோகா’ திரைப்படம், தரமான படைப்புகளுக்காக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய தரநிலையை அமைத்துள்ளது.

Advertisement

Advertisement