• Jan 19 2025

கோட் படத்தின் சாட்டிலைட் உரிமம் எத்தனை கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்து வருகின்றார்.

அது மட்டுமின்றி இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான காட்சிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நடிகர்களான பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் இதில்  நடித்துள்ளனர்.

அண்மையில் கோட் படத்திலிருந்து முதல் பாடலான பார்ட்டி ஒன்னு வைக்கட்டுமா விசில் போடு.. என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், இதன் சி.ஐ பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில், கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி ரூபா 90 கோடிக்கு வாங்கி உள்ளது என்ற தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கோட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே 90 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement