• Nov 09 2025

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக...!த.வெ.க தலைவர் விஜயின் கடுமையான விமர்சனம்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம்” கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருவதாகத் தெரிவித்தார்.


இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் படம் 2026 பொங்கலன்று வெளியாக உள்ளது.

மாநாட்டில் பேசும் போதே திமுக அரசை விமர்சித்த விஜய், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நம்பிக்கையை மோசடி செய்துள்ளது” என்றும், “சொன்னீர்களே? செய்தீர்களா?” எனக் கடுமையாக கேள்வி எழுப்பினார்.

சினிமா உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் கால் வைத்துள்ள விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தமிழக அரசியல் பரப்பை எந்த அளவுக்கு குலைக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியது.

Advertisement

Advertisement