கரூரில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையும் கடந்து உலகளவில் பேசப்படும் ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகார்வபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் பரப்புரை மேற்கொண்ட விஜயை பார்ப்பதற்காக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு விஜய் கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்கள் தாமதமாகி வந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அதிக கூட்டம் கூடி நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர்.
இதைத்தொடர்ந்து விஜய் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மயங்கி விழுந்தவர்களை அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதில் ஒரு சிலர் இறந்தே கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காக ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகியவர்கள் நேரிலே சென்று இருந்தனர். பலர் செல்ல முடியாத நிலையில் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது இரங்கலை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக ரஜினி வேதனை அளித்த விடயம் தொடர்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ப்ளூ சட்டை மாறன் .
அதன்படி அவர் கூறுகையில்,
கும்பமேளா, கள்ளக்குறிச்சி, விமான சாகச நிகழ்ச்சி, ஆணவப்படுகொலை... இதுக்கெல்லாம் வாய் தெறக்கல. இது சம்மந்தமா நிருபர்கள் எந்த கேள்வி கேட்டாலும் 'நோ கமண்ட்ஸ்' என சொல்வதும்,
'அரசியல் பேச மாட்டேன்னு எத்தனை தடவை சொல்றது?'என கோவமாக பதில் தருவதும்தான் வாடிக்கை. ஆனா.. இன்னைக்கு மட்டும் கழுகுக்கு திடீர்னு கண்ணு வேர்க்குது.. என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Listen News!