• Jun 24 2024

PT Sir பாஸ் மார்க் வாங்கினாரா? வாத்தியாக சொதப்பினாரா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிடி சார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் பாண்டியன்ராஜன், பாக்கியராஜ், அனிகா, தியாகராஜன், இளவரசு, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் PT Sir படத்தில் விமர்சனத்தை பார்ப்போம்.

ஈரோட்டில் பிரபல கல்வியில் நிறுவனம் ஒன்றில் PT  வாத்தியாராக வேலை பார்க்கும் ஆதியை அவரது அம்மா பொத்தி பொத்தி வளர்க்கிறார். தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரசியமான விஷயத்தை மாணவர் மத்தியில் உருவாக்கி பாராட்டுகளை பெறுகிறார். ஆனால் இதே சுவரால் எதிர் வீட்டுப்  பெண்ணான அனிகா சுரேந்திரனின் மூலம் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அதுவும் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குள்ளையே ஏற்படுகிறது. விளையாட்டுத்தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்சினையாய் மாறி இந்த விஷயத்தை எப்படி டீல் செய்தார்? அவர் எதிர் கொள்ளும் போராட்டம் என்ன? அனிக்காவுக்கு நீதி கிடைத்ததா என்பதே  படத்தின் மீதி கதை.


இந்த படத்தில் பிடி வாத்தியார் கெட்டப்பிற்கு அருமையாக பொருந்தி போன ஹிப்ஹாப் ஆதி துருதுருவன வந்தாலும் அவரது நடிப்பில் இன்னும் பாஸ் மார்க் வாங்க வேண்டும். நாயகியை தாண்டி கேரக்டருக்கு முக்கியமாய் இந்த ரோலில் நடிகை அனிதா காணப்படுவதோடு கதை இவரை மையப்படுத்திய அமைந்துள்ளதாக உள்ளது. எனினும்  அளவான நடிப்பை காட்டி பாராட்டுகளை பெற்றுள்ளார். தியாகராஜன் வழக்கமான வில்லனாகவே கதையில் வந்து செல்கிறார். இந்த படத்தில் ஏனையோரின் காமெடி ஓரளவுக்கு கலக்கி உள்ளது.

முதல் பாதியில் கமர்சியல் படத்துக்கு தேவையான வழக்கமான கதைக்களங்கள் இருந்தாலும் உயிரிழந்த அனிதா கதாபாத்திரத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை இரண்டாம் பாதி முடியும் வரை சொல்லாமல் நகர்த்தி பார்வையாளர்களை ஆசுவாசப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இந்த படத்தின் திரைக்கதையை வழமை போல நகர்த்தி   கிளைமாக்ஸ் இல் ட்விஸ்ட் வைத்துள்ளார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை.  பின்னணி இசை ஒரே ரகம். பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஹீரோவின் காட்சிகள் அயர்வை தான் கொடுத்துள்ளன. இன்னும் கொஞ்சம் புதுமையாக ஏதேனும் சேர்த்து சொல்ல முயற்சி செய்து இருந்தால் பிடி சார் அதிரடியாக அனைவரையும் கவர்ந்திருப்பார்.

Advertisement

Advertisement