தமிழ் திரையுலகில் கருத்து ரீதியாக எப்போதும் பேசுபொருளாக இருந்து வரும் இயக்குநர் மோகன் ஜி, 2020ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் திரௌபதி. சமூக மற்றும் கருத்தியல் பின்னணியில் உருவான அந்த படம், சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 திரைப்படம் நேற்று, ஜனவரி 23, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி, இந்த இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
திரௌபதி 2 திரைப்படம், முதல் பாகத்தைப் போலவே சமூக கருத்துக்களைத் தாண்டி, வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று புனைவு கலந்த கதையாக்கம், மோகன் ஜியின் வழக்கமான திரைக்கதை அணுகுமுறை ஆகியவை இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு வலுவாக அமைந்துள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோகன் ஜி இயக்கம் என்பதாலேயே, திரௌபதி 2 திரைப்படத்திற்கு ஒரு தரப்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளிலேயே, எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

பல திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் மிதமான அளவிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. திரௌபதி 2 வெளியானதைத் தொடர்ந்து, விமர்சகர்களும் ரசிகர்களும் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், திரௌபதி 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, திரௌபதி 2 திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 50 லட்சம் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மோகன் ஜியின் முந்தைய படமான திரௌபதி முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும்போது, இந்த வசூல் சற்று குறைவானதாக பார்க்கப்படுகிறது.
Listen News!