தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களிடையே குறுகிய காலத்திலேயே கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம். குறிப்பாக, பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர் பெரும் ரசிகர் வட்டத்தை பெற்றார். பிக்பாஸுக்குப் பிறகு சில திரைப்படங்களிலும் நடித்த அவர், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அபிராமி வெங்கடாச்சலம் கடவுள், ஆன்மீகம் மற்றும் உள்ளார்ந்த பயணம் குறித்து பேசும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவை பார்த்த பல இணையவாசிகள், “அபிராமி துறவியாகிவிட்டாரா?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், அபிராமி வெங்கடாச்சலம் ஈஷா யோகா மையத்தில், வெள்ளை நிற உடை அணிந்து, கண்ணீருடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரது முகபாவனைகளும், வார்த்தைகளும், ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
அந்த வீடியோவில் அபிராமி கூறியுள்ள வார்த்தைகள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது, “இந்த ஆண்டில் இருந்து இந்த பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன். ஆனால் எனக்குள்ளே இதை நாம் எப்படி செய்யப் போகிறேன் என்ற ஒரு பயம் இருந்தது. ஆனால், வெள்ளை துணியை என் மேலே போட்டதும், சிவனுக்கு ஏதோ ஒரு சேவை செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.” என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகள், அவரது ஆன்மீக எண்ணங்களையும், கடவுள் மீது உள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
Listen News!