தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. குடும்பப் பாசம், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு என ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த நடிகை என்றால் அது தேவயானி தான். இவர், கதாநாயகி, குணச்சித்திர நடிகை என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை தேவயானி, தனது திரை வாழ்க்கை குறித்தும், சினிமா பயணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, “என்னுடைய திரை வாழ்க்கையில் தினசரி ஒவ்வொரு நிமிடமும் நாம் எதையாவது ஒன்றை கத்துக்கிறோம். சினிமாவில நல்ல நல்ல படங்கள் வந்து கொண்டே தான் இருக்கு.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது திரை வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவு கூர்ந்தார். அதாவது, “நாங்க நடிக்கிற காலத்தில நிறைய நல்ல படங்களில நடிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு வந்தது,” என்று கூறிய தேவயானி, அந்த காலகட்டத்தில் வந்த கதைகளும், கதாபாத்திரங்களும் தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்டார்.
அத்துடன், " இன்னும் நிறைய பண்ணனும் என்று விருப்பம் இருக்கு.." என்றும் கூறியிருந்தார். தேவயானியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!