தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜெனிலியா. திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து சற்று இடைவெளி எடுத்திருந்தாலும், அவர் அளிக்கும் பேட்டிகள் மற்றும் சமூக கருத்துகள் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஜெனிலியா, குழந்தைகள் மற்றும் உணவுப் பழக்கம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிலியா அதன்போது,“நான் குழந்தையா இருந்ததை விட இப்போது உள்ள குழந்தைகள் ரொம்ப நல்ல குழந்தைகளாக இருக்கிறார்கள். நான் அசைவம் எல்லாம் சாப்பிட்டுத் தான் இருந்தேன். ஒரு முறை என் மகன் 'நீங்க விலங்குகளை நேசிக்கிறீங்க.. அப்புறம் எப்படி சிக்கன் எல்லாம் சாப்பிடுறீங்கனு?' கேட்டான். அன்னைல இருந்து நான் சைவம் சாப்பிடுறது விட்டுட்டேன். இப்போ எல்லாரும் தாவர உணவுகளை மட்டும் தான் சாப்பிடுறோம்" என்று கூறியிருந்தார்.
ஜெனிலியாவின் இந்த பேட்டி வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
திரையில் Bubbly character-களுக்காக அறியப்பட்ட ஜெனிலியா, வாழ்க்கையில் ஒரு பொறுப்புள்ள அம்மாவாகவும் திகழ்கிறார் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
Listen News!