தமிழ் சினிமாவில் ஆக்ஷன் என்றாலே நினைவுக்கு வரும் நடிகர்களில் முக்கியமானவர் அர்ஜுன். தனது அதிரடி நடிப்பு, கட்டுப்பாடான உடற்பயிற்சி, தைரியமான கதைத்தேர்வு ஆகியவற்றின் மூலம் ‘ஆக்ஷன் கிங்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் தந்த ஒரே நடிகர் இவர்.
பல தசாப்தங்களாக தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இந்திய சினிமாவில் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலங்களில் சில ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், 1980–90களில் வெளியான ஆக்ஷன் திரைப்படங்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றன.
அர்ஜுனின் திரைப்படங்களில் வெறும் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, ஊழல், சமூக அநீதி, அரசியல் நேர்மை, தேசப்பற்று போன்ற கருத்துகளும் ஆழமாக பதியப்பட்டிருக்கும். மேலும் நடிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் அர்ஜுன் தன்னை நிரூபித்துள்ளார்.

வயது ஒரு எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றும் ஃபிட்டான உடலமைப்புடன் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலங்களில் வெளியான திரைப்படங்களிலும் அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் வழங்கிய பேட்டி ஒன்றில், என் பிட்னஸ்க்கு காரணம் நான் சின்ன வயசுல இருந்து கடினமா பயிற்சி செய்து இருந்தது தான்.
ஆனா இப்ப நான் கஷ்டப்படத் தேவையில்லை. ஆறு நாள் ஒர்க் அவுட் பண்ணினா ஆறு பேக் வந்துடுது. அதற்கு காரணம் நான் செய்த கடினமான உடற்பயிற்சி தான். பிட்னஸ் பொருத்தவரை ஷார்ட் கட் என்கின்ற விஷயம் கிடையவே கிடையாது.
இப்போ இருக்கிற பசங்க எல்லாமே சீக்கிரமே வந்துடனும்னு ஷர்ட் கட்டுக்கு போயிடறாங்க. அது நிலைக்காது என அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
Listen News!