அஜித்தின் 50வது படமான மங்காத்தா திரைப்படம் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக நிறைந்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை குவித்தது. இந்த படம் தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகனும் நடிக்க தயங்கும் கதாபாத்திரமாக காணப்பட்டது.
இந்த படத்தின் ரீ ரிலீஸ்க்காக பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதன்படி படம் ரிலீஸ் ஆனதும் மேளதாளம், பட்டாசு, பால் அபிஷேகம், கேம்பா அபிஷேகம் என தியேட்டரை கதி கலங்க வைத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்த அஜித் ரசிகர்கள் சரவெடியை வெடித்துள்ளனர்.
இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில், ஆபத்தான செயலில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!