• Jan 26 2026

திரையுலகை தாண்டி இதயங்களை கைப்பற்றிய ‘சிறை’... கிரிக்கெட் வீரர் தினேஷ் பாராட்டு

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் கடந்த டிசம்பர் 25, 2025 அன்று வெளியாகிய திரைப்படம் தான் ‘சிறை’. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த படம், விமர்சகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் பாராட்டையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ளது.


விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். புதுமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரி, தனது முதல் படத்திலேயே யதார்த்தமான கதையமைப்பும், உணர்ச்சிபூர்வமான திரைக்கதையுடனும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். காதல், வாழ்க்கை, மனித உறவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சிறை’, வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை அளிக்கிறது.

விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் ‘சிறை’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாத போதிலும், வலுவான கதை, சிறந்த இயக்கம் மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பு ஆகியவை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.

இந்த நிலையில், ‘சிறை’ படத்தை பார்த்து பாராட்டியவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். திரைப்படத்தை பார்த்த பிறகு தனது கருத்தை பகிர்ந்துள்ள அவர், படத்தின் உணர்வுபூர்வமான கதையையும், நடிகர்களின் நடிப்பையும் மனமார பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,“நேற்று சிறை படம் பார்த்தேன். அருமையான படம். யதார்த்தமான மற்றும் நம் மனதுக்கு நெருக்கமான, நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை. விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரரின் இந்த பாராட்டு, படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் தினேஷ் கார்த்திக்கின் இந்த கருத்து வைரலாகி, படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement