• Jan 26 2026

சசிகுமாரின் புதிய பட அப்டேட்டைப் பகிர்ந்த படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்திய காலங்களில் இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிறன. இப்படங்களில் கதையின் தனித்துவம், கதாபாத்திரத்தின் ஆழம் மற்றும் திரைக்காட்சியின் சீரமைப்பு ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். இந்த வரிசையில், இயக்குநர் இரா.சரவணன் எழுதிய நாவல் “சங்காரம்” தற்போது திரையுலகில் உருவாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இரா.சரவணன், தமிழ்ச் சினிமாவில் கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்ற இரு துறைகளிலும் தனித்துவமான பெயரைப் பெற்றவர். அவர் எழுதிய நாவல்களைத் திரைக்காவியமாக மாற்றும் முனைப்பும், கதையின் உணர்ச்சிகளை திரையில் வெளிப்படுத்தும் திறனும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சமீபத்தில் அவர், சங்காரம் நாவலை திரைக்கவியமாக இயக்குவதற்கு திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த முயற்சி தமிழ் சினிமாவுக்குப் புதுமையாக கருதப்படுகின்றது. இப்படத்தில் நாயகனாக சசிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement