பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் டைட்டில் வின்னராக வருவார் என பலர் நம்பியிருந்த நிலையில், கானா வினோத் திடீரென பணப்பெட்டியை எடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கானா வினோத்திற்கு அவரது மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பின் ஒரு பகுதியாக, சட்டமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், சிலைக்கு முத்தம் கொடுத்து தனது அன்பையும் வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இந்த நிலையில், கானா வினோத்தின் இல்லத்திற்கு ஹோம் டூர் சென்றுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பார்க்கும் இடமெல்லாம் அவருடைய அம்மாவின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெற்றியை அம்மா என்னுடன் இருந்து பார்க்கவில்லையே என கானா வினோத் கலங்கிய காணொளியும் பார்ப்போரை உருக வைத்துள்ளது.
சாதாரண வீட்டில் வாழும் கானா வினோத் அங்கு தன்னுடைய அறை, ஹால் என்பவற்றை சுற்றிக் காட்டியுள்ளார். மேலும் பிக் பாஸிலிருந்து எடுத்து வரப்பட்ட பணப்பெட்டி எங்கே என கேட்டதற்கு, அதை இங்கே வைக்க இல்லை என ரொம்ப கூலாக பதில் அளித்துள்ளார்.
Listen News!