தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாமல்லபுரம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான 3,000 நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி QR கோடு வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனை, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்த கூட்டம் தவெக கட்சியின் தேர்தல் ஆயுதமாகவும், உறுப்பினர்களை ஒருமித்த சிந்தனையில் அமைக்கவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் மேடையில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு , நடிகர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜயின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டுகளை பெற்றுள்ளது.
Listen News!