தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் பரப்பில் பரபரப்பான கட்டங்கள் நடந்து வருகின்றன. கட்சிகள் தங்களது செயற்பாடுகளை தீவிரப்படுத்தி, நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உள்ள நிலையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) இன்று, ஜனவரி 25ஆம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செயல்வீரர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டம், தவெக கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. தேர்தல் அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர், கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களை ஒருங்கிணைத்து இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த 2,000க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் ஹோட்டல் வளாகம் முழுவதும் அரசியல் கோஷங்களாலும், ஆதரவுக் குரல்களாலும் அதிர்ந்தது.
நிர்வாகிகள் தங்கள் உற்சாகத்தையும் ஆதரவும் வெளிப்படுத்த, தொடர்ந்து விசில் அடித்தனர்.

கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
அதாவது, "நம் அரசியல் பயணத்துல மிக முக்கியமான கட்டத்துல இருக்கிறோம். ஏன் இவ்ளோ அழுத்தமா சொல்லுறேன்... ஏதாவது அழுத்தம் இருக்கும்னு நினைக்கிறீங்களா? அழுத்தமா? நமக்கா? இந்த அழுத்தத்துக்கெல்லாம் அடங்கிப் போற ஆளா… இந்த ஆளு. இந்த மூஞ்ச பார்த்தா அப்படியா தெரியுது உங்களுக்கு... அதெல்லாம் நடக்காது. அதுவும் முக்கியமா நம்ம கிட்ட அது நடக்கவே நடக்காது." என்று கூறியுள்ளார்.
Listen News!