தமிழ் சினிமாவில் மசாலா படம் மூலம் அறிமுகமான , நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் சூரி காமெடியில் அசத்திருப்பார்.
ஜீ தமிழ் ஒளிபரப்பான சீதாராம், மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி போன்ற சீரியர்களிலும் வில்லி கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் ஆதரவை பெற்றார்.
தற்போது மகளே என் மருமகளே, கார்த்திகை தீபம் 2 ஆகிய சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் ரேஷ்மா. அதே நேரத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றார். மேலும் இவருடைய படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்று வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் துளி கூட மேக்கப் இல்லாமல் சிம்பிளாக இருக்கும் அவருக்கு, ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!