விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்பொழுது பரபரப்பான கட்டத்தை கொண்டுள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்-2. இந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில், சக்திவேல் கோமதியைப் பார்த்து, ராஜி விசயத்தில நம்ம குடும்பம் அவமானப்படக் கூடாது என்று நினைச்சிருந்தால் நம்ம பிள்ளையை நம்ம கிட்ட தானே ஒப்படைச்சிருக்கணும் என்கிறார். மேலும் அப்பா வழியா வரவேண்டிய சொத்தை ராஜி மூலமா எடுத்துக்கலாம் என்று நினைச்சுத் தான் இப்புடி செய்தீங்களா என்று கேட்க்கிறார் சக்திவேல்.
அதைக் கேட்ட பாண்டியன் சாப்பிடாமல் அங்கிருந்து கிளம்புறார். அதனை அடுத்து சக்திவேல் என்ன தான் இருந்தாலும் கதிர் ராஜியை கல்யாணம் செய்திருக்க கூடாது என்கிறார். அதைக் கேட்ட கோமதி ராஜிக்கும் கதிருக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வைச்சேன் என்கிறார்.

பின் சக்திவேல் எல்லாத்துக்கும் காரணம் நீ தானா? என்று கோபமாக கேட்க்கிறார். அதைத் தொடர்ந்து முத்துவேலும் என்ர மகள் விசயத்தில முடிவெடுக்க நீ யாரு என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்கள். மறுபக்கம், பாண்டியன் புருஷன் பொண்டாட்டிக்க நம்பிக்கை என்ற விஷயம் உடைந்தால் திரும்ப ஒட்டவைக்க முடியாது என்கிறார். அதைக் கேட்ட கோமதி என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லி அழுகிறார். இதுதான் இனிநிகழவிருப்பது...
Listen News!