• Jan 26 2026

‘பேட்ரியாட்’ படத்தில் நயன்தாராவின் கரெக்டர் இதுதானா.? புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஷயம் என்றால், முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் திரைப்படங்கள் தான். அந்த வகையில், மலையாள திரையுலகின் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் ‘பேட்ரியாட்’. இந்த படம் தற்போது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் மலையாள சினிமாவின் அடையாளங்களாக விளங்கும் நடிகர்கள். பல தசாப்தங்களாக தங்களது நடிப்புத் திறன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இவர்கள், ஒரே படத்தில் இணைவது வரலாற்று தருணமாகவே பார்க்கப்படுகிறது.

‘பேட்ரியாட்’ திரைப்படம், இந்த இரு நட்சத்திரங்களையும் ஒரே திரையில் காணும் வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்குவதால், படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். சமூக அரசியல் கதைக்களங்களையும், நவீன திரைக்கதையையும் கையாளும் திறமை கொண்ட இயக்குநராக அவர் அறியப்படுகிறார். 


மோகன்லால், மம்முட்டி மட்டுமின்றி, இப்படத்தில் பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது நயன்தாராவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியானதும், சமூக வலைத்தளங்களில் அது வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement