தமிழ் சினிமாவில் வரலாற்று கதைகள் எப்போதும் தனி இடத்தைப் பிடித்துள்ளன. சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி 2 ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம், இந்திய வரலாற்றின் முக்கியப் பருவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரியமும், அரசியல் மையமும் கொண்ட கதைப்பின்னலுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

திரையுலகில் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான ரிச்சர்ட் ரிஷி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், வரலாற்று சூழலுடன் ஒத்திசைக்க முயற்சி செய்துள்ளது.
எனினும், திரௌபதி 2 விமர்சன ரீதியில் சுமாரான வரவேற்பு பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால், இரண்டு நாட்களுக்குள் உலகளவில் ரூ. 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் அதே நாளில் ரீ ரிலீஸான அஜித்தின் மங்காத்தா திரைப்படம் செய்த வசூல் தான் என சில தகவல்கள் பரவி வருகின்றன.
Listen News!