தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி காந்த் தனது ரசிகர்களுடனான அன்பை எப்போதும் வெளிப்படுத்தி வருகின்றார். திரைப்படங்களின் மூலம் மட்டுமல்லாமல், சமூக சேவை, பொதுமக்களுக்கு உதவி, மற்றும் நேரடியாக ரசிகர்களை பாராட்டுதல் ஆகியவற்றில் அவர் பெரும் உற்சாகத்துடன் செயல்படுகிறார். சமீபத்தில், மதுரையில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையில் இயங்கி வரும், 5 ரூபாய் பரோட்டா கடையை நடத்தி வரும் உரிமையாளரின் உழைப்பை பாராட்டும் வகையில், ரஜினி காந்த் அந்த குடும்பத்தை நேரில் அழைத்து தங்கச் செயின் வழங்கி பாராட்டியுள்ளார்.

இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!