• Jan 19 2025

கஷ்டத்தில் கண்ணீர் வடித்த தனுஷின் அக்கா- ஓடிப் போய் உதவி செய்த விஜயகாந்த்- வைரலாகும் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் உச்சத்தில் இருந்த போது, விஜயகாந்துக்கு என மாபெரும் ரசிகர்கள் படை இருந்தது. நடிப்பை விடவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்வார் கேப்டன்.

முக்கியமாக கால்களால் விஜயகாந்த் போடும் சண்டைக் காட்சிகளுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.


இதையடுத்து, கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.இவருடைய உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தனுஷின் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த உதவி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா திரையுலகில் வந்த சமயத்தில் அவருக்கு பெரிதும் வசதி வாய்ப்பு எதுவுமே இல்லஅப்போது அவருடைய மகள் கார்த்திகா தேவிக்கு மருத்துவராக வேண்டும் என கனவு இருந்துள்ளது. சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தினால் கார்த்திகா தேவியால் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியாமல் போய்விட்டது.


கஸ்தூரி ராஜாவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் தனியார் கல்லூரியிலும் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. இப்படியொரு சமயத்தில் நடிகர் விஜயகாந்த் எதர்ச்சியாக கஸ்தூரி ராஜா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திகா தேவி அழுதுகொண்டு இருப்பதை பார்த்த விஜயகாந்த், கஸ்தூரி ராஜாவிடம் என்ன பிரச்சனை என கேட்டுள்ளார்.

 மருத்துவ கல்லூரியில் சேரமுடியவில்லை என கூற, உடனடியாக கார்த்திகா தேவிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் . விஜயகாந்த் தனக்கு உதவி செய்தது குறித்து தனுஷின் அக்கா கார்த்திகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே மனம் உருகி பதிவு வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement