• Jan 19 2025

பர்சனல் லைப் பற்றிய கேள்விக்கு மைக்கை கழட்டியெறிந்து வெளியேறிய தனுஷ்..! பின்னணி என்ன?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகர் ஆகவும் பன்முகம் கொண்டு திகழ்ந்து வருபவர்  தான் நடிகர் தனுஷ். இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் 100 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்திருந்தது.

இதை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தயாரித்து வருகின்றார். அது மட்டுமின்றி நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்க  உள்ள இட்லி கடை என்ற படத்தையும் இயக்க உள்ளார். இந்த  படத்திற்கான படப்பிடிப்பு தேனியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

அதே போல் தன்னுடைய சகோதரியின் மகனை வைத்து, தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, 'குபேரன்' திரைப்படமும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தனுஷ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி 2. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அமலாபால், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், கஜோல் போன்றவர்கள் முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தனுஷ் கலந்து கொண்டார். 


இதன் போது தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில், சுச்சி லீக்ஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டன. அதற்கு தான் படத்தில் பிசியாக இருக்கின்றேன் இது போன்ற விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை என கூறியுள்ளார்.

எனினும் சுச்சி லீக்ஸ் விவகாரத்தினால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டது என்று தனுஷிடம் கேட்கப்பட்டபோது தனுஷ் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று யார் சொன்னது? யாரிடமாவது சொல்லி உள்ளேனா? மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருக்கும் தனி உரிமை என்று ஒன்று உள்ளது. நான் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இது ஒரு முட்டாள் தனமான நேர்காணல் என மைக்கை தூக்கிப்போட்டு விட்டு வெளியேறியுள்ளார்.  அதன் பின்பு சேனல் தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் தனுஷிடம் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன,


Advertisement

Advertisement