சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் அந்த நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதன் காரணத்தினால் ரஜினிகாந்த் மீது உள்ள மரியாதையினால் தான் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி போடுவதற்கு இதன் இயக்குனரான ஞானவேல் முடிவெடுத்தார். அதன் பிறகு சூர்யாவின் ரசிகர்கள் ரிலீஸ் தேதி குறித்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இதை தொடர்ந்து இன்றைய தினம் கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகார்வபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை, தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் உள்ளதை நினைத்து சூர்யா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும் இன்னொரு தரப்பினரோ சூர்யா பயந்துவிட்டார் என கிண்டல் அடித்து வருகின்றார்கள்.
அதாவது, வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகின்றது. ரஜினியுடன் போட்டி போட்டு வெல்ல முடியாது என்பதால் நொண்டி சாக்கு சொல்லி கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போட்டார்கள்.
அதன்பின் அமரன் படம் தீபாவளியை முன்னிட்டு 31ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த நாளில் கங்குவா திரைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் அன்றைய தினமும் வெளி விடாமல் எந்தவித போட்டியும் இல்லாத நாளில் கங்குவா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
இந்த காரணத்தினால் தன்னைவிட சிறியவரான சிவகார்த்திகேயனுடன் மோதுவதற்கு சூர்யா பயந்துவிட்டார். மேலும் அவருடன் போட்டி போட்டால் தனது வசூல் அடி வாங்கி விடும் என்று சமூக வலைத்தளங்களில் தற்போது சர்ச்சை பதிவுகள் கிளம்பியுள்ளன.
Listen News!