• Sep 19 2025

நண்பனின் குடும்பத்துக்காக ஓடோடி வந்த தனுஷ்! கண் கலங்கி நின்ற SK

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

காமெடி நடிகரான ரோபோ சங்கருக்கு அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்த  காரணத்தினால் ஒரு வருடத்திற்கு முன்பே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டார். 

இதன்போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.  அதன் பின்பு தீவிர சிகிச்சை பெற்று ரோபோ சங்கர் குணமடைந்து அதிலிருந்து மீண்டு வந்தார்.  

அதன் பின்பு  உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவில் நடித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற புது படத்தின் பூஜை ஒன்றிலும் கலந்து கொண்டார்.  இவ்வாறு புதிய படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஷூட்டிங்கில் திடீரென மயங்கி விழுந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். 


இதைத் தொடர்ந்து ரோபோ சங்கரின்  குடும்பத்தாருக்கு பிரபலங்கள்  முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களுடைய அஞ்சலியை நேரிலேயே சென்று தெரிவித்து வருகின்றார்கள்.  இவருடைய இழப்பு  பலரின் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .


இந்த நிலையில்,  ரோபோ சங்கரின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று  ஆறுதல்   தெரிவிப்பதற்காக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன்  மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர் நேரில் சென்ற காட்சிகள் தற்போது  பார்ப்பவர்களின் கண்களை கதி கலங்க செய்துள்ளது. 

அதன்படி  தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த  ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவை  தனுஷ்  கட்டி அனைத்து ஆறுதல் சொல்லுகின்றார். அதுபோலவே சிவகார்த்திகேயனும் ரோபோ சங்கரின் மனைவியை எப்படி தேற்றுவது என்று தெரியாமல்  தனது வருத்தத்தை தெரிவித்தார். 




Advertisement

Advertisement