தனுஷ் இயக்கத்தில் அவருடைய சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்றது. இதன் போது நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. நாயகன் படத்தில் நடித்த போது அதைப் பற்றி எப்படி பேசினார்களோ அதே போல விஐபி படத்தில் நடித்ததை இன்றளவும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என்னை வழியில் பார்க்கும் மக்களும் தனுஷின் அம்மா என்று தான் சொல்லுவார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் என்னிடம் வந்து தனுஷ் என்ன சாப்பிடுவார், எப்படி தூங்குவார் என்று எல்லாம் கேட்பார்கள் இதை நினைக்க சந்தோஷமா இருக்கும். சினிமா என்னை ஒரு குடும்பமாகவே இணைத்துள்ளது.
இந்த படத்தில் பவிஷ் எனக்கு மகனாக நடிக்கின்றார். ஒரு சீனில் பவிஷ் எனது மடியில் படுக்க வேண்டும். அப்போது அது நான் படுக்க வேண்டிய இடம் என்று தனுஷ் சொன்னார். அதில் அவருடைய பொறாமையை நான் பார்த்தேன்.
தனுஷை எல்லாரும் மல்டி டாஸ்க் என்று கூறுவார்கள். அதைவிட அவரிடம் நிறையவே டிசிப்ளின் இருக்குது. அது பெரும்பான்மையாக யாரிடமே இருக்காது. ஆனாலும் தனுஷின் டிசிப்ளினை பார்த்து நானே வியந்து உள்ளேன். டைம் என்றால் டைம் தான்.. பொதுவா டப்பிங் பணிகளுக்கு டைரக்டர் வரமாட்டாங்க. ஆனால் தனுஷ் சின்ன ஆர்டிஸ்ட் டப்பிங் பண்ணுவது என்றால் கூட சரியாக வந்து கவனிப்பார்.
அவர் ரொம்பவுமே கஷ்டப்பட்டார். அதனால்தான் இவ்வளவு தூரம் ஜெயித்து காட்டியுள்ளார். இந்த படத்தில் பவிஷும் கடினமாக உழைத்து உள்ளார். அவர்களுக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும் என சரண்யா தெரிவித்துள்ளார்.
Listen News!