விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறைதாங்கி நிஷா. இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் காமெடி நடிகராகவும் காணப்படுகின்றார்.
இவர் டைமிங்கில் காமெடி அடித்து கோவை சரளா ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். தனக்கு கிடைக்கும் சிறிய சம்பளத்திலும் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவிகளை செய்து வருகின்றார். சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே சென்று உதவி வழங்கியிருந்தார் .
இதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார். அதன் பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிலையில், அறைதாங்கி நிஷா சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்து அதில் குடி பெயர்ந்து உள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது நிஷாவுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும் அவருடைய இன்ஸ்டா பதிவில், உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு காய்ச்சியாச்சு .வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரு கிடையாது.
சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்த கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க, திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா.
அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்,ஆறு மாசமா சென்னையில வீடு தேடுன போ ஆர்டிஸ்ட் வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து இப்போ வீடு வாங்கியாச்சு.
எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம், எல்லாருக்குமே ரொம்ப நன்றி என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும்,என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி..
எல்லாத்தையும் விட பெரிய நன்றி இறைவனுக்கும் எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மட்டும்தான்..நன்றி மக்களே.. என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!