தெலுங்கு சினிமாவில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த மீனாட்சி சவுத்ரி, தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் முக்கிய கேரக்டரில் அறிமுகமானார். அதன் பின்பு சிங்கப்பூர் சலூன், கோட் ஆகிய படங்களில் நடித்தார்.
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனாலும் இந்த படத்தில் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கிடைத்தது. அதன் பின்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக சாதாரணமாக நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படமும் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்து மாபெரும் வெற்றி கண்டது. மேலும் சமீபத்தில் அவர் வழங்கிய பேட்டியில் கோட் படத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி சவுத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றார். இவர் கிளாமராக எடுக்கும் புகைப்படங்கள் கடும் வைரலாகி வரும்.
இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆரஞ்சு கலர் நிறத்தில் அவர் அணிந்த ஆடை பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அவரை தங்க மீன் என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
Listen News!