• Dec 06 2024

தெய்வத்திருமகள் சீரியல் நடிகரின் மகன் கோர விபத்தில் பலி..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நடிகராக திகழ்ந்தவர் தான் கார்த்திக். இவர் ஆரியா நடித்த சார்பட்டா திரைப்படம் உட்பட ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலிலும் போலீஸ் ஆபீஸராக நடித்துள்ளார்.

அந்த சீரியலில் அவர் தான் பிரகாஷ் மட்டும் சத்யாவுக்கு பல உதவிகளை செய்திருப்பார். இவரது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.

இந்த நிலையில்,  நடிகர் கார்த்திக்கின் மகன் லித்திஷ் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மகாபலிபுரம் சாலை உள்ள விளையாட்டு திடலுக்கு சென்று காரில்  வீடு திரும்பியுள்ளார்


இதன் போது விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற கார்த்திக்கின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய நண்பர்களும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி உள்ளார்கள்.

தற்போது உயிரிழந்த லித்திஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருடன் விபத்தில் படுகாயம் அடைந்த இருவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். தற்போது நடிகர் கார்த்திக்கு பலரும் தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள்

Advertisement

Advertisement