• Jan 18 2025

புடிக்கலனா நேரா சொல்லணும்! காதல் தோல்வி குறித்து கவலையில் தர்ஷிகா!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் காதல் கதைகள் இடம் பெறுவதும் அது வெளியே வந்த பின்னர் முடிவடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசன் 8யிலும் விஷால்-தர்ஷிகா காதல் காட்சிகள் இடம் பெற்றது அனைவரும் அறிந்த விடயமே. இந்நிலையில் இது குறித்து தர்ஷிகா பேசிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 


தற்போது வெளியாகிய ப்ரோமோவில் தர்ஷிகா விஷாலுடனான காதல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் " இங்க எல்லாரும் சந்தோசமா இருக்காங்க ஆனால் என்னால அப்படி இருக்க முடியல. நான் அப்படி ஜாலியா இருக்க ரொம்ப ட்ரை பண்ணுறேன். புடிக்கலைனா புடிக்கலனு சொல்லிட்டு வந்துரனும். ஆனா அவங்களுக்கு உன்ன பிடிச்சி இருக்கு நீ சின்னதா ஏதும் பண்ணா கூட பிடிச்சி இருக்கும்" என்று சொல்கிறார்.


மேலும் பேசிய இவர் "நான் சொல்லியிருக்கேன் இந்த வீட்டுல எனக்கு ரொம்ப ஸ்பெஷல் விஷால் என்று, ஆனால் வார்த்தையிலே எல்லார்கிட்டயும் சொல்லிட்டிங்க. அதுக்குள்ள நான் ஏன் வரப்போறேன். இங்க இப்ப எப்படி ஆகிருச்சினா நான் போய் கேட்டு அவரு நோ சொன்னமாதிரி ஆகிருச்சு. அது அப்போ பிரன்ஷிபா மட்டும் இருக்கவில்லை" என்று சோகமாக சவுந்தர்யாவிடம் சொல்கிறார்.  இதனை கேட்ட சவுந்தர்யா " நாங்க ஏதும் கேட்டாலே ரொம்ப சேபா பதில் சொல்லுவான்" என்று விஷால் குறித்து சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 

Advertisement

Advertisement