இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வந்தது ரசிகர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் வருத்தம் அளிப்பதாக, ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு, பிரபலங்கள் சிலர் விவாகரத்து பெற்று பிரியும் நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கையின் பின்னர் இப்படி இருவரும் திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் போது ஏன் விவாகரத்து முடிவை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இரைக்காக காத்திருக்கும் கழுகுபோல இருந்த யூடியூப் சேனல்களுக்கு இந்த செய்தி ஒரு பிரியாணியாக அமைந்தது அதனால் வாயிக்கு வந்த கதையை எல்லாம் பேசி பல ஆதாரமற்ற தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி பிரித்து மேய்ந்து விட்டார்கள்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் "என் தந்தை ஒரு சாதனையாளர், இசை துறைக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் ஈன்ற மதிப்புகள், மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் ஒரு சாதனையாளராகவே பார்க்க படுகிறார்.

அவர் குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவும். என ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
 
                              
                             
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!