விஜய் டிவியின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி ஷோவின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. சமையல் போட்டியையும், காமெடியையும் ஒரு நேரத்தில் தரும் இந்த நிகழ்ச்சி, மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், சீசன் 6-ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ராஜு, டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றியாளராக தேர்வான ராஜுவிற்கு 5 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்த உண்மைகள் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சிறந்த காமெடி மற்றும் சமையல் திறன்களுடன் பல சுற்றுகளைக் கடந்து வந்த ராஜு, இறுதியாக பெரிய போட்டிகளையும், சவால்களையும் வென்று டைட்டிலை கைப்பற்றியுள்ளார். அவர் வெற்றியடைந்த அதே நிமிடத்தில், ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சியை பின்தொடர்ந்த பார்வையாளர்கள், சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை குவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் , ராஜுவுக்கு பரிசு தொகையுடன் கூடிய விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் அத்தகைய விமர்சனங்களுக்கு தற்பொழுது ராஜு நேரடியாக பதிலளித்துள்ளார். தனது வெற்றியைத் தொடர்ந்து பேசிய அவர்,
"குக் வித் கோமாளி ஷோ ஸ்கிரிப்ட் என எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மை தான். யார் எங்கு சமைக்க வேண்டும், நடுவர் எங்கே அமர வேண்டும் உள்ளிட்டவை ஸ்கிரிப்ட் தான். ஆனால் மற்ற விஷயங்கள் ஸ்கிரிப்ட் இல்லை. உண்மையான தருணங்கள் இருக்கின்றன. உண்மையான கலாட்டா, உண்மையான உழைப்பு என்பன உள்ளன!" என்றார்.
Listen News!