பொதுவாகவே ரசிகர்களால் அதிகம் எதிர் பார்க்கப்படும் படங்களுக்கென்று தனியொரு வரவேற்பு காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வரும் திரைப்படம் என்பதால் கோட் படத்துக்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது.
முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும்.இதில் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த் , பிரபுதேவா , மோகன் , ஜெயராம் , சினேகா , லைலா , அஜ்மல் அமீர் , மீனாட்சி சவுத்ரி , வைபவ் , யோகி பாபு , பிரேம்கி அமரன் மற்றும் யுகேந்திரன் ஆகியோறும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே குறித்த படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்காண உரிமம் யாருக்கு வழங்கப்படும் என சினிமா வட்டாரங்களினுல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இதனை தயரிப்பாளர் அர்ச்சனா கல்பதி தனது x தள பக்கத்தில் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.

Listen News!