கோட் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் ஆன பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் அவர்களை ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. அது தொடர்பில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில், திரைப்படங்களில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரை உலகில் உள்ள அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் உலா வருகின்றன.
குறிப்பாக இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றன. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!