பொன்னியின் செல்வன் திரைக்காவியத்திற்கு பின் அடுத்து மணிரத்தினம் இயக்கும் கேங்ஸ்டர் அதிரடி நாடகத் திரைப்படமான "தக் லைஃப்" ற்கான திரைக்கதை மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனின் பங்களிப்புடன் தயாராகியிருக்கிறது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் , மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் ,சிலம்பரசன்,த்ரிஷா, நாசர் என பெரும் நடச்சத்திர பட்டாளமே நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
![]()
2024 ஜனவரியில் சென்னையில் ஆரம்பமான படத்திற்கான முதலாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் டில்லியிலும் தொடர்ந்தது.இந்நிலையில் "தக் லைஃப்" படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் இம் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாவதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியிருக்கிறது.
Listen News!