• Dec 03 2024

இயக்கியது ஒரே ஒரு படம் தான்.. அதற்குள் BMW கார் எப்படி? மர்மமான கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனர் மிகவும் விலை உயர்ந்த BMW காரை வாங்கி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து ஒரே ஒரு படம் இயக்கியவர் எப்படி BMW கார் வாங்கினார் என்ற மர்மமான கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். 

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி, உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டான்’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக ரஜினி படத்தை இயக்குவார் என்றும் அவருக்கு கதை கூறி சம்மதம் பெற்று விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சில மாதங்களில் அந்த படம் கைவிட்ட கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து  தனுஷ் இடம் கதை கூறியதாகவும் அவரது அடுத்த படம் தனுஷ் நடிக்கும் படம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் சிபி சக்கரவர்த்தி இயக்கயிருக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மிகவும் விலை உயர்ந்த BMW காரை வாங்கி இருப்பதாக சிபி சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபி சக்கரவர்த்தி தனது பெற்றோருக்கு ஒரு டாடா நிறுவனத்தின் காரை வாங்கி கொடுத்த நிலையில் தற்போது BMW கார் வாங்கியுள்ளார். பொதுவாக அறிமுக இயக்குனர் என்றால் குறைந்த சம்பளம் தான் தந்திருப்பார்கள், அப்படி இருக்கும் போது பெற்றோருக்கு ஒரு கார், தனக்கு ஒரு BMW கார் வாங்கியது எப்படி என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக உள்ளது.



Advertisement

Advertisement