விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 6 போட்டியாளர்களின் ஒருவராக இறுதிவரை இருந்தவர் ஜாக்குலின். இறுதியாக நடந்த மணி டாஸ்க்கின் பின்னர் எலிமினேட் ஆகி வெளியேறினார். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் ஜாக்குலின் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் செல்வதற்கு முன்னரே ஜாக்குலின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானார். அதனை தொடர்ந்து சீரியல் நடிப்பது, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என சின்னத்திரையில் குயினாக வலம் வந்தார். விஜய் டீவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரைக்கும் வந்துள்ளார்.
பிக்பாஸ் 8, பைனலிஸ்ட் தேர்வாவதற்கு முன்பு பணப்பெட்டி போட்டி நடந்தது. அதில் ஜாக்குலின் மட்டும் தோற்று விட்டார். இதனால் பிக்பாஸில் இருந்து அவர் வெளியேறினார். பிக்பாஸ் முடிந்து ஜாக்குலின் ஒரு பதிவை கூட போடவில்லை. பிக் பாஸ் முடிந்து வெளியேறிய கையோடு ஹேர் ஸ்டைலை மாற்றும் வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Listen News!