• Jan 19 2025

சைதன்யா-சோபிதா திருமணம்! அந்த புகைப்படத்தை நீக்க கூறி சமந்தாவை நச்சரிக்கும் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சமந்தா சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவரின் பல திரைப்படங்கள் ரசிகர்களினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொலிவூட், டோலிவுட், கோலிவுட் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார். 


இந்நிலையில் நடிகர் நாகசைத்தனியாவை காதலித்து திருமணம் முடித்துக்கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர். அதன் பின்னர் நாகசைத்தன்யா தனது சினிமா துறையில் பயணிக்க நடிகை சமந்தா தனது சினிமா துறையில் பயணித்தார். 


உடல் கோளாறு காரணமாக கொஞ்சம் துவண்டு இருந்த சமந்தா பின்னர் மீண்டும் உடல் நிலை தேறி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாகசைத்தன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.


இவர்களின் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று  வருகிறது. இன்று அவர்களின் திருமணமும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


இந்நிலையிலே சமந்தாவின் ரசிகர்கள் நாகசைத்தன்யா திருமணம் செய்துகொள்ள போகிறார் ஆகையால் அவருடன் எடுத்த உங்களது திருமண புகைப்படத்தினை நீக்குங்கள் என்று கூறிவருகின்றனர். சமீபத்தில் தந்தையை இழந்த சமந்தா ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்று பார்ப்போம்.  















Advertisement

Advertisement