2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துக் கொண்டுள்ளார்.
எங்கேயும் காதல் என்ற படத்தில் இவர் குளுகுளு என இருக்கும் க்யூட்டான நடிகையாக காணப்பட்டதோடு இவரது உடல் அமைப்பை பார்த்து பல ரசிகர்களும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக ஆனார்கள். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து தனுசுடன் மாப்பிள்ளை, விஜய் உடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் என பல வெற்றி படங்களில் நடித்தார். அது மட்டும் இல்லாமல் மான் கராத்தே, வாலு, பிரியாணி, அரண்மனை 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.
d_i_a
ஆனாலும் ஹன்சிகா திடீரென தனது உடல் அமைப்பை மாற்றியது இவரது மார்டெக்கு சரிவை சந்தித்தது. இவருடைய ஐம்பதாவது படம் மகா படத்தை பெரிதளவில் நம்பினார். ஆனாலும் அந்தப் படம் வெற்றி படமாக அமையவில்லை.
இடைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தனது நண்பரான சோஹா கட்டாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் ஹன்சிகா நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஹன்சிகா 'இரண்டாவது திருமண நாள் வாழ்த்துக்கள் பேபி... உன்னை நான் ரொம்பவும் நேசிக்கின்றேன்..' என்று தனது கணவரை டேக் செய்து இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள இரண்டு வருடம் ஆகிவிட்டதா என்று ஹன்சிகா ஜோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!