• Nov 22 2024

72 குண்டுகள் முழங்க விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்..! இறுதி வரை கலையாத மக்கள் கூட்டம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழ் நாட்டையே உலுக்கியது.

இதை தொடர்ந்து இன்று காலை அவரின் பூதவுடல் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.


இந்த நிலையில், தனது வாழ் நாளில் மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டதோடு, 72 குண்டுகள் முழங்க அவரின் உடலுக்கு அரச மரியாதையும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக கோயம்பேடு பகுதியில் விஜயகாந்த் அவர்கள் மீளா துயில் கொள்ளப்போகிறார். அவர் இதுவரையில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தின் மூலமே அவரின் கல்லறையும் அமைந்துள்ளது.


மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில், அவருக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளதாகவும், நடிகர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, இறுதியாக 72 குண்டுகள் வான் நோக்கி சுடப்பட்டு, வாத்தியங்கள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது மக்களின் கண்ணீருடன் அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement