• Jan 19 2025

பிக் பாஸ் எலிமினேஷனில் திடீர் திருப்பம்! வெளியேறிய போட்டியாளர் இவர் தான்? சற்றுமுன் தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 89 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.



பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் மணி, ரவீனா. இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வர முதலே பிரபலமான ஜோடியாக விஜய் டிவியில் வலம் வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீனா எலிமினேஷன் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போஸ்ட்கள் வைரலாகி உள்ளது.



அதன்படி, இந்த வாரம் இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவர் மட்டும் அதாவது ரவீனா மட்டும் வெளியேறி உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் காதல் புறாக்களாக இதுவரையில் வலம் வந்த மணி - ரவீனா இந்த வாரம் முதல் பிரிந்து விடுவார்கள் என்ற தகவலை அறிந்து சிலர் கவலையில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement