• Jan 18 2025

செய்வினையை முறிக்க விபரீத பரிகாரம் செய்யும் மனோஜ்! சிக்கப் போகும் ரோகினி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வித்யா முத்துவின் போனை கடலில் வீசுவதற்காக நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவருடைய செருப்பு அறுந்து விடுகின்றது. இதனால் பக்கத்தில் உள்ள செருப்பு கடைக்கு சென்று அங்கு செருப்பை தைக்க கொடுக்கின்றார்.

குறித்த கடை முத்துவும் மீனாவும் உதவி செய்யும் தாத்தா பாட்டியின் கடையாகும். அவர் செருப்பை தைத்துகொடுத்ததும் வித்யா அதில் ஒரு ஆட்டோவை பிடித்து செல்கிறார். போகும் போது ஃபோனை கீழே விழுத்தி விடுகின்றார். இதை பார்த்த தாத்தாவும் பாட்டியும் அந்த போனை எடுத்து வைத்து விடுகின்றார்கள்.

வித்யா ஆட்டோவில் போகும்போது ரோகினி கால் பண்ணி போனை பீச்சில் போட்டுடியா என்று கேட்க, வித்யா போனை தேடும் போது போனை காணவில்லை. இதனால் ஆமாம் போனை போட்டு விட்டேன் என்று சொல்லுகின்றார். இதனால் ரோகிணி சந்தோஷப்படுகிறார். மேலும் ரோகிணி ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்றார். நான் ஒரு பொய்தானே சொன்னேன். இனி அந்த போனால் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை என வித்யா கணக்கு போடுகின்றார்.


இதைத்தொடர்ந்து மனோஜ் கடையில் யாரோ மூன்று முட்டைகளை வைத்து விட, அதை பார்த்து மனோஜ் பதறி அடிக்கிறார். மேலும் இது செய்வினை முட்டை என்று சொல்லி பயம் காட்டவும் அங்கு வந்த அவருடைய பார்க் நண்பர் அவர்களை ஒரு ஜோசியக்காரர்களிடம் கூட்டிப் போகிறார்.

குறித்த ஜோசியக்காரர் இது செய்வினை முட்டை தான். இதுக்குரிய பரிகாரம் செய்யவில்லை என்றால் நீ நடுத்தெருவுக்கு வந்து விடுவாய் என்று பயமுறுத்துகின்றார். மேலும் உனக்கு பிடித்தது யார் என்று கேட்க, அவர் அம்மாவை சொல்லுகின்றார். இதனால் நீயும் உனது அம்மாவும் ஒரு நாள் விரதம் இருந்து உங்களுடைய குலதெய்வத்துக்கு பூச்சட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். அப்போது தான் இந்த செய்வினை முறியும் என்று சொல்லி அனுப்புகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


 

Advertisement

Advertisement