தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அடுத்து யார் முதலமைச்சராக பதவியேற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதுவரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது என கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்திலும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், இயக்குநர் மோகன் ஜி பகிர்ந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவில், “தம்பிகளா.. வாழ்க்கை இவ்வளவு குறுகியது அல்ல.. எந்த தவறான முடிவுகளும் உங்கள் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும்.. அமைதியாக இந்த நாளை கடந்து செல்ல தயாராகுங்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் இணைந்து முடிவுகளை பாருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து நேரடியாக தேர்தல் முடிவுகளை குறித்து அல்லாதபோதிலும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூறப்பட்டதாக பலரும் கருதுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் இந்த பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பலரும் அதனை பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!