• Jun 27 2024

பிக்பாஸ் சீசன் 6 தோழிகளுக்கு ஒரே படத்தில் நடிக்க வாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா?

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நெருக்கமான தோழிகளாக இருந்து வரும் நிலையில் தற்போது அவர்கள் இருவருக்கும் ஒரே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஷிவின் மற்றும் குவின்சி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஒரு அணியாக, நெருக்கமான தோழிகளாக இருந்தனர் என்பதும், குயின் சி 56வது நாளில் வெளியேறினாலும், ஷிவின் கடைசி வரை தாக்கு பிடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பதும் தெரிந்தது.



இந்த நிலையில் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றுப்பயணம் செய்த புகைப்படம் வீடியோக்களை அவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருவரும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஒரே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விமல் நடிக்கும் படம் ஒன்றில் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இருவருக்குமே நல்ல கேரக்டர்கள் என்றும் இந்த படம் வெற்றி பெற்றால் இருவரும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



மேலும் படத்தின் பூஜை அன்று எடுத்த புகைப்படத்தை ஷிவின் மற்றும் குவின்சி ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement