பிக்பாஸ் போட்டியாளர்களான அருண் - அர்ச்சனா கலந்து கொண்ட நேர்காணல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இருவரும் தமது காதல் அனுபவத்தைப் பற்றி கதைத்து வருகின்றனர். அதனை கேட்கவே மிகவும் அழகாக இருந்ததுடன் இந்தக் காலத்தில் இப்படி ஒரு காதலா? என பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் படி கதைத்துள்ளனர்.
![](https://samugamimages.com/cinesamugam_images/17388384770.png)
குறித்த நேர்காணலில், உங்க ரெண்டு பேருக்குள்ளும் சண்டை வந்தால் எப்படி இருக்கும் என நடுவர் கேட்டிருந்தார். அதற்கு அருண் அதிகளவு சண்டை போட்டுக் கொள்வது அர்ச்சனா தான். அதற்கு அர்ச்சனாவும் நான் தான் எல்லா சண்டையும் துவக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சின்ன பிரச்சனைகளை எல்லாம் பெரிதா நினைத்து கோவப்படுவார் என்றார் அருண். குறிப்பாக ஒரு நாள் நான் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றிருந்தேன் அப்ப என்னால சொன்ன டைம்க்கு வர முடியவில்லை அதனால் அங்கேயே தங்கிட்டு அடுத்த நாள் தான் வந்திருந்தேன். அதற்கு ஒரு நாள் முழுவதும் சண்டை போட்டார். எனினும் எங்களுக்குள் வருகின்ற சண்டை நீண்ட நேரம் நீடிக்காது எனவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிக்பாஸ் சென்றதனால் இப்பொழுது பெரிதாக நாங்க சண்டை போடுவதில்லை எனக் கூறியதுடன் அதனை நினைத்து அர்ச்சனா மிகவும் வருத்தமாக உள்ளார் எனவும் கூறியிருந்தார். பிக்பாஸிற்குள் அருண் போனபோது அவனை ரொம்பவே miss பண்ணேன் எனக் கூறியதுடன் அவர் எப்படா வெளில வருவார் என்று இருந்துச்சு என்றார் அர்ச்சனா. அத்துடன் அருணின் பிறந்த நாளுக்கு அர்ச்சனா அனுப்பின கடிதத்தை பார்த்து எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
Listen News!