• Mar 08 2026

"கர" திரைப்படம் ரிலீஸாக நாள் குறிச்சாச்சு.! சம்மர் ரேஸில் தனுஷின் மாஸ் என்ட்ரி..

shali / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை மாற்றிக் கொண்டு வரும் முன்னணி நடிகர் தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். “கர” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் நாயகியாக மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகுக்கு வருகை தந்துள்ள மமிதா பைஜூ நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் சேர்க்கை இப்படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கர” திரைப்படம் த்ரில்லர் மற்றும் உணர்ச்சி அம்சங்கள் கலந்த கதையம்சத்தைக் கொண்டதாக உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா முன்பு இயக்கிய படங்கள் விமர்சன ரீதியாக கவனம் பெற்றிருந்த நிலையில், இந்தப் படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று தரும் என படக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


இசையமைப்பாளராக G. V. பிரகாஷ் இணைந்துள்ளார். ஏற்கனவே தனுஷுடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ள ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்திற்கும் கதைக்கு ஏற்ப வித்தியாசமான இசையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி “கர” திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு வெளியாகும் இப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement