விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்தான் சௌந்தர்யா. இவர் கலந்து கொள்ளும் முன்பே பிக்பாஸ் மேடையில் தான் தனது குரலால் நிறைய அவமான பட்டதாக வருத்தப்பட்டு இருந்தார். ஆனாலும் உங்களுடைய நிஜ குரலே அழகாகத்தான் இருக்கின்றது என்று விஜய் சேதுபதி அவரைத் திடப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யா செய்யும் சேட்டைகளும் அவருடைய பாடி லாங்குவேஜ்யும் பலரை சிரிக்க வைத்தாலும் அவர் அதிக அளவில் அதை கையாண்டு வருவது சகப் போட்டியாளருக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலமாகவே பிக்பாஸில் தாக்கு பிடித்ததாகவும் இவருக்கு எந்த ஒரு திறமையும் இல்லை அதனால் இவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்று நேரடியாகவே முத்துக்குமரன், அருண், தீபக் ஆகியோர் சாடி இருந்தனர்.
எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் ரன்னரப்பா சௌந்தர்யா வெற்றி பெற்றார். இதன்போது மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை திறமை இல்லை என்றால் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைதள பக்கத்தில் சௌந்தர்யா அரெஸ்ட் பண்ணப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பதறி அடித்து சௌந்தர்யாவுக்கு என்ன ஆயிற்று? என்ன காரணத்தினால் அவர்களை அரெஸ்ட் பண்ணினார்கள்? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
ஆனாலும் அவர் பிக்பாஸ் சீசன் எட்டின் மூலம் பலரின் இதயங்களை திருடிவிட்டார். அதனால் அவர் கைது செய்யபட்டார் என காமெடியாக பதிவிட்டுள்ளனர். இதனை ஆரம்பத்தில் பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!