• Jan 18 2025

கார்த்திகை தீபம் சீரியல் கதாநாயகிக்கும் சுந்தரி சீரியல் கார்த்திக்கும் இடையில் இப்படி ஒரு உறவு இருக்கிறதா?- இதுவரை தெரிந்திடாத ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான சீரியல் நடிகராக இருப்பவர் தான் கார்த்தி. இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த சீரியல் என்றால் அது செம்பருத்தி தான். இந்த சீரியல் மூலம் பட்டித் தொட்டியெல்லாம் பிரபல்யமானார்.

இவ்வாறு இந்த சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிய வேளை திடீரென படவாய்ப்பு வந்தததால் சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்பொழுது அந்த சீரியல் முடிவுக்கும் வந்து விட்டது. இந்த நிலையில் தற்பொழுது ரி என்ட்ரி கொடுக்கும் விதமாக ஷு தமிழில் கார்த்திகை தீபம் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


கறுப்பு நிறம் கொண்டாலும் ஒரு பெண்ணுக்கு பாடுகின்ற திறமை இருக்கு அவர் எப்படி தனது வாழ்க்கையில் முன்னேறப்போகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.எனவே அந்த சீரியலில் தீபா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆர்திகா குறித்தே வாங்க பார்க்கலாம்.

ஆர்திகா தமிழ் சினிமாவில் இதுவரை 4 படங்களில் நடித்துள்ளாராம்.ஆனால் அப்படங்கள் எதுவும் வெளியாகவில்லையாம். அத்தோடு கார்த்தியுடன் இணைந்து பிளக் அன்ட் வயிட் என்னும் படத்தில் நடித்திருக்கின்றாராம். இப்படத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு தான் இவர் இந்த சீரியலில் நடிக்க காரணம் என்று கூறப்பட்டது.


ஆனால் இவர் சீரியலில் நடிக்க காரணமானவர் சேது படத்தில் வந்த அபிதா தானாம். கேரளாவைச் சேர்ந்த இவர் அபிதாவுடன் இருந்த நட்பின் காரணத்தினாலேயே சீரியல் நடிக்க வந்தாராம்.அத்தோடு இவர் மாதவி என்னும் சீரியலில் சுந்தரி சீரியல் கதாநாயகன் கார்த்தியுடன் நடித்திருந்தாராம். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கின்றதாம்.

இந்த குறும்படம் ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றதாம். மேலும் இந்த சீரியலில் நடித்து வருவதன் மூலம் தான் நிறம் சமூகத்தில் எவ்வளவு பெரிய விடயமாக பார்க்கப்பட்டு வருவதை அறிந்து கொண்டாராம். அத்தோடு இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என நம்பி நடித்து வருகின்றாராம் என்றும் அண்மையில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement