தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். இவர் இயற்றிய முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால், சூரி ஆகியோருக்கும் மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
இதை தொடர்ந்து நான் மகான் அல்ல என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் கார்த்தியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ராஜபாட்டை, ஜீனியஸ், பாயும் புலி, சேம்பியன், குற்றமே குற்றம் ஆகிய படங்களை இயக்கினார். ஆனாலும் இந்த படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன.
இந்த நிலையில், மீண்டும் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சுசீந்திரன் இயக்கிய திரைப்படம் தான் 2கே லவ் ஸ்டோரி. இந்த படம் இன்றைய தினம் வெளியான நிலையில் இது பற்றிய விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. அவற்றை விரிவாக பார்ப்போம்.
இந்த படத்தில் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக ஹீரோவும் (கார்த்திக்) ஹீரோயினும்(மோனிகா) பழகி வருகின்றார்கள். பள்ளி பருவம் முதல் கல்லூரி, தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை அனைவரும் காதலர்கள் என்று நம்பி விடுகின்றார்கள். ஆனால் இவர்கள் எப்போதுமே நண்பர்களாக பழக ஹீரோ இன்னொரு பெண்ணை (பவித்ரா) காதலிக்க ஆரம்பகின்றார்.
இதன் போது கார்த்திக் மோனிகாவுடன் பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால் மோனிகாவின் நட்பை துண்டிக்குமாறு சொல்லுகின்றார். ஆனால் மோனிகாவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கார்த்திக் சொல்ல, அவரை பிரேக்கப் செய்கின்றார் பவித்ரா. இவர்கள் இருவரையும் மோனிகா சேர்த்து வைக்க, இறுதியில் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார் பவித்ரா.
தனது காதலியின் மரணத்தை தாங்க முடியாமல் கார்த்திக் துயரத்தில் இருக்க அவரை மோனிகா மீட்டெடுக்கின்றார். அதன்பின்பு அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கின்றது. அதில் அவர்கள் திருமணம் செய்தார்களா? அல்லது இறுதி வரை நண்பர்களாக இருந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.
2k லவ் ஸ்டோரி திரைப்படம் வழக்கமான பிரண்ட்ஷிப் காதல் கதையாகவே அமைந்துள்ளது. நல்ல நண்பர்களாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறந்த மெசேஜை சொல்லி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் தற்காலத்திற்கு தேவையான கருத்தை தான் இந்த படம் சொல்லி உள்ளதாகவும் இதனை 2 கே கிட்ஸ் கட்டாயம் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும் இந்த படத்தின் முதல் பாதி நல்லாக இருந்தாலும் இரண்டாவது பகுதி போர் அடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதில் நடித்துள்ளவர்களின் நடிப்பு அருமை என்றும், இயக்குனர் சுசீந்திரனின் கம்பேக்காக வெயிட்டிங் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு ரசிகர் காதலர் தினத்தன்று பார்க்கவேண்டிய மிகச் சிறந்த படமாக 2கே கிட்ஸ் லவ் ஸ்டோரி அமைந்துள்ளதாகவும் இது ஒரு நல்ல கண்டெண்ட் உள்ள படம் என்றும், ஆண், பெண் இடையேயான நட்பு, எதிர்பார்ப்பு, இருவருக்கும் இடையேயான காதலின் வேறுபாட்டை பக்காவாக எடுத்துச் சொன்ன படமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள், ஒரு ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாகவே பழக முடியும் என காட்டிய விதமும் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. ஆனாலும் இந்த படத்தின் விறுவிறுப்பை இன்னும் கூட்டி இருக்கலாம் என்ற ஒரு விஷயம் மட்டும் மைனஸ் பாயிண்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!